Tuesday, March 8, 2011

பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்


நெஞ்சில் உள்ள வஞ்சம் கொண்டு
மிருகக் கமா பசியை தீர்க்க !
பெண்ணின் உதட்டில் சாயம் தேய்த்து
சிதைந்த சிலையை நிருத்திடுவாயோ !!
சிவப்பாய் எறிந்திடும் தெருவின் முனையில்

சில்லறை காசின் சீரிபுக்காக
சேலை திரையை கிளித்துவிட்டாயே !!
பெண்ணாய் பிறந்தது பாவம் என்று
பகலும், இரவும் கதைதிடுவளோ,
கல்லறை போகும் வழியில் கூட
கரையை அகற்ற துடிதிடுவளே.....

நீயும் நானும் பிறந்திட ஊதவும்
பெண்ணகளை மதித்திட
வேண்டும் !! வேண்டும் !!
உன் இச்சை பசியை திர்பதற்காக
பெண்ணை பஞ்சாய் மாற்றிட
வேண்டாம் !! வேண்டாம் !!

கோயில் கருவறையில்
பெண்ணாய் இருக்கும் சிலையை வணங்கும்
மூடர் பரம்பரையே !!!
கருவறையை தண்ணில் கொண்ட மலரை
மதித்திட  மாற்றயோ !!!

சமூகம் கொடுத்த எச்சை முத்திரம்
இனியும் உங்கள் முதுகில் வேண்டாம்
நீயும் நானும் சமமாய் வாழ
சமத்துவம் எங்கும் பிறந்திட வேண்டும்
அதை நாம் ஒன்றாய் இருந்து 
அமைத்திட வேண்டும்

இருளில் இருக்கும் பெண்களுக்கு , பெண்கள் தின நல்வாழ்த்துக்கள் 

Tuesday, March 1, 2011

விவசாயி

சேத்தில் நின்று, சோர்வை மறந்து
ஏர் இழுத்து 
ரத்தம் வழிந்து
படைக்கிறாய் எங்களுக்கு உணவை 
இருக்கிறோம் மறதியாக உன் நினைவை மறந்து 
உன் செயலை மறந்து 

Sathish S

பருத்திக்கு குடுக்கும் விலை

உடுத்தும் உடை இது,
உடுத்திடும் ஓர் உயிர்,
செந்தாள் கடையிலே
 கறைந்திடும் பொடியேன 
உடுத்திட இல்லை என்று 
என் உறவுகள் பலர் 
இருக்கிறார் பாரிலே 

Sathish S

ஏமாற்றம்

வந்து சொன்னால் என்னிடம் 
சற்று வியந்து பார்த்தேன் 
அன்று ஏப்ரல் மாதம் அல்ல 
என் மனதில் அலைகடல் என 
சந்தோசம் பொங்கியது, 
திகைத்து விட்டது என் சந்தோசம் 
நடந்து விட்டது நான் நினைத்தது 

ஆம் 
அந்த நாளை தவிர 
மற்ற எல்லா நாளும் எனக்கு 
ஏப்ரல் ஒன்னாக மாறியது

Sathish S

ஆசை

தினமும் துங்கியபின்
கனவுக் கதவை தட்டுகிறாய்!
எப்பொழுது வருவாய் ? 
என் இதயக் கதவை தட்ட.....

Sathish S

காயம்

என் கவியின் கண்களால் கவிதை படைத்தேன்,
என் மனதின் குணம் கண்ட கவிதை கொடுத்தேன் ,
என் உலகம் உயிர்ப்பித்தது ஒரு கணம் 
பல நினைவுகள் சுற்றி போகும் என் மனம் 
கடைசியில் அடைந்தது வெற்றிடம்,

என் வார்த்தை உளியால் பலர் பட்ட காயம்,
நீங்குமோ, 
நீங்குமோ நெஞ்சே, நீ நீக்கினால்
என் கண்ணீர் கொண்டு தழுவுவேன்
உன் கால்களை ...
Sathish S

ஆணாதிக்கம்


ஒரு ஆணின் வீரத்தை ரசித்தவள்,
ஒரு ஆணின் கோபத்தை ரசித்தவள்,
அவன் கோளைதனைதை ரசிக்க மறுக்கிறாள்,
அவன் கண்ணீரை துடைக்க துடிக்கிறாள்,
ஒரு பெண்ணுக்கு  வெக்கத்தை குடுத்தவன்,
ஒரு பெண்ணுக்கு  செல்வதை குடுத்தவன்,
ஒருபெண்ணுக்கு  வீரத்தை குடுக்க மறுக்கிறான்,
ஒரு பெண்ணின்   கோபத்தை தடுக்கிறான்

Sathish S